பாகிஸ்தான் வடக்குப் பகுதியில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மிகபெரிய பள்ளத்தில் கவிழ்ந்ததில் பேருந்தில் பயணித்த 25 பேரும் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராவல்பிண்டியிலிருந்து கிளம்பிய இந்தப் பயணிகள் பேருந்து சகர்து நோக்கி வந்து கொண்டிருந்த போது கில்ஜித் அருகே உள்ள ரவுந்து என்ற இடத்தில் கிடுகிடு பள்ளத்தில் கவிழ்ந்ததில் 25 பேரும் பலியாகியுள்ளனர்.
பள்ளத்திலிருந்து இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ரவுந்து பகுதி கமிஷனர் குலாம் முர்டஸா தெரிவித்தார். மீட்புப் பணியில் பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் சாலை விபத்துக்கள் சர்வசாதாரணமானவை, பெரும்பாலும் அலட்சியமாக ஓட்டுதல் அல்லது மோசமான சாலைகளினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
கில்ஜித் பால்டிஸ்தானுடன் கைபர் பதுன்க்வாவை இணைக்க்கும் பாபுசர் கனவாய் அருகே கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பயணிகள் பேருந்து ஒன்று மலை மீது மோதியதில் 10 ராணுவ வீரர்கள் உட்பட 27 பேர் பலியாகி சுமார் 15 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.