ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃப் 
உலகம்

கரோனா வைரஸுக்கு எதிராக போராடும் நேரத்தில் பொருளாதார தடைகளை கடுமையாக்குவதா? - அமெரிக்காவுக்கு ஈரான் கண்டனம்

ஐஏஎன்எஸ்

கரோனா வைரஸுக்கு எதிராக போராடும் நேரத்தில் ஈரானுக்கு எதிரான சட்டவிரோத பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்கியது தீங்கிழைக்கும் செயல் என்று தெரிவித்து அமெரிக்காவுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைமூலம் கரோனா வைரஸுக்கு எதிராக மனித குலத்தைக் காக்க போராடும் நேரத்தில் இஸ்லாமிய குடியரசின் வளங்களை வடிகட்டுவதுபோன்ற நோக்கத்தை கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃப் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது கடுமையாக சாடியுள்ளார்,

இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃப் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

எங்கள் குடிமக்கள் கரோனா வைரஸ் காரணமாக இறந்துகொண்டிருக்கிறார்கள். கரோனா வைரஸிலிருந்து மனித குலத்தை காக்க வேண்டி ஈரான் போராடி வருகிறது. இந்த நேரத்தில் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடையை மேலும் இறுக்கியுள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உள்ள ஈரானின் வளங்களை மேலும் வடிகட்டுவதன்மூலம் எமது நாட்டிற்கு முழுக்கமுழுக்க தீங்கிழைக்கும் ஒரு செயலில் அமெரிக்க ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்க பொருளாதார பயங்கரவாதம் கொஞ்சகொஞ்சமாக மருத்துவ பயங்கரவாதத்தால் மாற்றப்பபட்டு வருகிறது. இனியும் இதனை பார்த்துக்கொண்டு உலகம் அமைதியாக இருக்காது.

இவ்வாறு ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரானில் கரோனா பாதிப்பு குறித்து தெரிவித்த நாட்டின் சுகாதார அமைச்சக மக்கள் தொடர்பு மற்றும் தகவல் மையத்தின் தலைவர் கியானூஷ் ஜஹான்பூர் கூறுகையில், ''கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸிலிருந்து 21 புதிய இறப்புகளையும் 1,076 புதிய வழக்குகளையும் சந்தித்துள்ளோம், கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக 5,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ளனர்.'' என்றார்.

SCROLL FOR NEXT