உலகம்

கரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியா உட்பட 7 நாடுகளில் விமானப் பயணங்களுக்கு குவைத் தடை

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா உட்பட ஏழு நாடுகளின் விமானப் பயணங்களுக்கு குவைத் அரசு ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து குவைத் விமானத்துறை அதிகாரிகள் கூறும்போது, “எகிப்து, லெபனான், சிரியா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் விமானப் பயணங்களுக்கு குவைத் தடை விதிக்கிறது. மேலும் இந்த ஏழு நாடுகளிலிருந்து வரும் குவைத் மக்கள், பிற நாட்டு மக்களின் பயணங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது” என்றார்.

இந்தத் தடை ஒருவாரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குவைத்தில் இதுவரை 61 பேருக்கு கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக கோவிட் காய்ச்சலால் தென் கொரியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT