இலங்கையில் நாடாளுமன்ற பதவி காலம் நிறைவடைய ஆறு மாதம் இருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் நவம்பர் மாதம் நடந்து முடிந்தது இதில் பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.
நவம்பர் மாத இறுதியில் இலங்கையின் பிரதமராக மகிந்தா ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் இலங்கையின் நாடாளுமன்ற பதவிக் காலம் முடிய ஆறு மாதம் காலம் உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.
மேலும் புதிய நாடாளுமன்றம் மே 14 அன்று கூடுகிறது என்றும் இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த தேர்தலிலின் மூலம் நாடளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றும், கூடுதல் பலத்துடன் இலங்கையில் ஆட்சியை கோத்தபய ராஜபக்சே தொடருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.