அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த காட்சி : படம் உதவி ட்விட்டர் 
உலகம்

கரோனா வைரஸுக்கு முதல் பலி: ஈரான் நாட்டினர் வரத் தடை; அமெரிக்க மக்கள் பயணத்துக்கு அதிபர் ட்ரம்ப் புதிய கட்டுப்பாடு

பிடிஐ

கரோனா வைரஸுக்கு அமெரிக்காவில் முதல் பலி ஏற்பட்டதையடுத்து, ஈரான் நாட்டினர் அமெரிக்கா வரத் தடை செய்யப்பட்டுள்ளனர், அதேபோல் தென் கொரியா, இத்தாலி நாடுகளில் உள்ள குறிப்பிட்ட சில நகரங்களுக்கு அமெரிக்க மக்கள் செல்லவும் தடைவிதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவின் ஹுபே மாகாணத்தில், வுஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை கரோனா வைரஸுக்கு சீனாவில் மட்டும் 2900 பேர் உயிரிழந்துள்ளனர், 85 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சீட்டல் நகரின் புறநகரான கிரிக்லாந்துபகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

. மேலும், கிங் கவுண்டி பகுதியில் பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரியவில்லை இதனால் வாஷிங்டனில் மாகாணத்தில் அவசரநிலையை கவர்னர் பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

துரதிர்ஷ்டமாக அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். அந்த பெண் உண்மையில் சிறந்தவர், 50 வயதுக்கு மேற்பட்ட அந்த பெண் உயிரிழந்தது வேதனையாக இருக்கிறது. இன்னும் அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை.

உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருந்தால், நீங்கள் சீக்கிரம் மீண்டுவந்துவிடலாம். இதுவரை 15 பேர் கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டுள்ளனர். யாரும் பதற்றமடைய வேண்டும், நம் நாடு அனைத்துக்கும் தயாராக இருக்கிறது. இது கடினமான நடவடிக்கையாக இருந்தாலும், அரசின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது " எனத் தெரிவித்தார்

அப்போது துணை அதிபர் மைக் பென்ஸ் கூறுகையில், " ஈரான் நாட்டைச் சேர்ந்த யாரும் அடுத்த 14 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் வரக்கூடாது என அதிபர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல தென் கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள குறிப்பிட்ட சில நகரங்களில் கரோனா தாக்குதல் அதிகமாக இருப்பதால், அங்கு அமெரிக்க மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸுக்கு எதிராக அமெரிக்க அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT