துருக்கி அதிபர் எர்டோகன் 
உலகம்

சிரியாவில் துருக்கி தாக்குதல்

செய்திப்பிரிவு

சிரிய ராணுவம் மற்றும் இஸ்புல்லா அமைப்பின் அதிகாரிகள் கலந்து கொண்ட சந்திப்பில் துருக்கி வான்வழி தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் முக்கிய திருப்பங்களை பதிவு செய்யும் அல் - மஸ்டர் வெளியிட்ட செய்தியில், “ சிரியாவில் உள்ள அலெப்போவில் உள்ள செர்பெக் நகரில் சிரிய ராணுவ அதிகாரிகள் மற்றும் இஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்ட முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிலையில் இந்தச் சந்திப்பை குறி வைத்து துருக்கி வான்வழித் தாக்குதல் நடத்தியது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் துருக்கி நடத்திய தாக்குதலில் சிரிய ராணுவம் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.

முன்னதாக இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலியாகினர்.

இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது.

SCROLL FOR NEXT