எகிப்தில் புதிய தீவிரவாத தடுப்புச் சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் அப்துல் ஃபத்தா அல் சிஸி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் கீழ், அதிகாரிகளின் கருத்து களைத் திரித்துக் கூறினால் பத்திரி கைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான சட்டத்துக்கு நேற்று முன்தினம் இரவு அதிபர் கையெழுத்திட்டார். அதன் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் புதிய சட்டத்தின்படி, தீவிரவாதம் தொடர்பான வழக்கு களை விசாரிக்க சிறப்பு நீதிமன் றங்கள் அமைக்கப்படும். தவிர, காவல்துறை மற்றும் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளை, சட்ட விசாரணையில் இருந்து பாது காக்கவும் இந்தப் புதிய சட்டத் தின் கீழ் வழிவகை செய்யப் பட்டுள்ளது. மேலும், எந்த ஒரு தீவிரவாத இயக்கத்தைத் தோற்று வித்தாலும் அல்லது வழிநடத்தி னாலும், அதன் தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இவை தவிர, அதிகாரிகளின் கருத்துகளுக்கு மாற்றாக செய்தி வெளியிடும் பத்திரிகைகளுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் எகிப்திய பவுண்டுகளும் (சுமார் ரூ.16 லட்சம்) அதிகபட்சம் 5 லட்சம் பவுண்டுகளும் (சுமார் ரூ.40 லட்சம்) அபராதமாக விதிக்கப்பட உள்ளன.
முன்னதாக, இதுபோன்ற செய்திகளைத் திரித்து வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட இருந்தது. ஆனால், உள்ளூர் பத்திரிகைகளின் விமர்சனம் காரணமாக, அது விலக்கிக் கொள்ளப்பட்டது.