துருக்கி-கிரீஸ் எல்லையில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த் மக்கள் போக இடமில்லாமல் நிர்கதியாகத் தவித்து வருகின்றனர். இவர்களுக்கும் கிரீஸ் போலீஸுக்கும் இடையே இன்று சண்டை மூண்டது.
மேற்கு துருக்கி மாகாணமாக எடிர்னெ அருகே கிரீஸ் எல்லையில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் குவிந்தனர். வடக்கு சிரியாவில் 33 துருக்கிய படைவீரர்கள் பலியானதைத் தொடர்ந்து ஐரோப்பாவுக்குள் கிரீஸ் வழியாக நுழையும் அகதிகளை தங்களால் தடுத்து நிறுத்த முடியாது என்று துருக்கிக் கூறியதையடுத்து கிரீஸ் தன் எல்லையை அகதிகளுக்கு மூடியது.
இந்நிலையில் எல்லையில் தள்ளுமுள்ளு ஏற்பட கிரீஸ் போலீஸாருக்கும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் இடையே சண்டை மூண்டது. புலம்பெயர்ந்தோரில் சிலர் போலீஸ் அதிகாரிகள் மீது கல்லெறி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து மக்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசினர் கிரீஸ் போலீஸார்.
துருக்கி எல்லை அருகே சிரியாவில் கடந்த டிசம்பர் முதல் புலம்பெயர்ந்துள்ளனர், துருக்கியில் சுமார் 3.7 மில்லியன் சிரிய அகதிகள் உள்ளனர், இனிமேலும் அனுமதிக்க முடியாது என்று கூறும் துருக்கி அவர்கள் கிரீசுக்குப் புலம் பெயர்வதைத் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.