உலகம்

70 வயதுக்கு உட்பட்டவர்கள் பிறந்தநாள் விருந்தளிக்க கூடாது: சீன மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு

பிடிஐ

70 வயதுக்கு உட்பட்டவர்கள் பிறந்தநாள் விருந்தளிக்க கூடாது என்று சீனாவின் டோங்ஜியாங் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தங்கள் பிறந்த நாள் கொண் டாடட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவில் பிறந்தநாளின்போது உறவினர்களுக்கும், நண்பர் களுக்கும் விருந்தளிக்க வேண் டும் என்பதும் அதற்கு பதிலாக அவர்கள் பரிசுப் பொருட்களை அளிக்க வேண்டும் என்பதும் கட் டாயம் என்பது போன்ற கலாச் சாரம் பரவியுள்ளது. இது மக்க ளுக்கு தேவையற்ற செலவுகளை ஏற்படுத்துகிறது. பணக்காரர் களுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை என்றாலும், நடுத்தர மக்கள் பலர் இதற்காக கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.

மேலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பதை பலர் தங்கள் செல்வாக்கை காட்டும் வகையில் ஆடம்பர நிகழ்ச்சியாக நடத்தி வருகின்றனர். மது விருந்து, அதிரடி இசை நிகழ்ச்சி போன்றவற்றால் நிம்மதி கெட்டு சமூகத்தில் பிரச்சினை ஏற்படு கிறது. எனவே பிறந்தநாள் விருந் துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள தாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப் பும், வரவேற்பும் ஒரு சேர கிடைத்துள்ளது. பிறந்த நாளின் போது ஒருவரை வாழ்த்தி பரிசளிப் பதும், அதற்கு பதிலாக அவர் விருந்தளிப்பதும் பல ஆண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே இதற்கு தடை விதிப்பது தவறானது என்று எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.

எனினும் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக அதிக புகார்கள் வந்ததால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் நிலைமையை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டோங்ஜியாங் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT