உலகம்

கோவிட்-19: சீனாவில் பலி எண்ணிக்கை 2,663 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

சீனாவில் செவ்வாயன்று நாவல் கரோனா வைரஸுக்கு மேலும் 71 பேர் பலியானதையடுத்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2663 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பலி எண்ணிக்கை குறைந்துள்ளதோடு, புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக சீன அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் புதிதாக கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 508 ஆக உள்ளதாக தேசிய சுகாதாரக் கமிஷன் தெரிவித்துள்ளது.

சீனாவில் இரண்டுக்கும் மேற்பட்ட மாகாணங்களில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்று அரசு தரப்பு கூறுகிறது. சீனாவில் குறைந்திருந்தாலும் பிற நாடுகளில் அதிகரிப்பதாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பினால் உலகின் 2வது பெரிய பொருளாதார நாடான சீனாவின் பொருளாதாரம் தேக்க நிலை அடைந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலினால் ‘கலாச்சாரப் புரட்சி’க்குப் பின் முதல் முறையாக நாடாளுமன்ற அமர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரோனா மையமான ஹூபேயில் பல பத்து லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். அவ்வப்போது அத்தியாவசியப் பொருட்களுக்காக வீட்டிலிருந்து ஒருவர் வெளியே வர அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT