உலகம்

காபூல் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில் அருகே நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

விமான நிலைய நுழைவாயில் அருகில், பயணிகள் பரிசோத னைக் கூடத்துக்கு வெளியில் நேற்று மதியம் பலர் கூட்டமாக காத்திருந்தனர். அப்போது வெடிகுண்டு பொருத்திய கார் ஒன்று வெடித்து சிதறியதில் 4 பேர் இறந்தனர். மேலும் 1 பெண், 1 குழந்தை உட்பட 17 பேர் காயம் அடைந்தனர். எனினும் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுஸ் மாகாணத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் நேற்று முன்தினம் 29 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் 25 பேர் சட்டவிரோத ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள். இக்குழுவினர் கடந்த காலத்தில் பாதுகாப்பு படைகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வந்தனர். இவர்கள் சந்தித்து பேசும் போது தற்கொலைப் படை தீவிர வாதி குண்டுவெடிப்பை நிகழ்த்தி யுள்ளார். இறந்தவர்களில் எஞ்சிய 4 பேர் பொதுமக்கள்.

SCROLL FOR NEXT