சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 2, 592 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து சீன தேசிய சுகாதார அமைச்சகம் தரப்பில், “ சீனாவில் ஞாயிற்றுக்கிழமை கரோனா கோவிட் 19 (கரோனா) வைரஸ் பாதிப்புக்கு 150 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு கரோனா பாதிப்புக்கு 2, 592 பேர் பலியாகி உள்ளனர். 77,150 பேர் கோவிட் 19 (கரோனா) வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்கொரியாவில் கோவிட் 19 (கரோனா ) வைரஸ் பாதிப்புக்கு மேலும் 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்புக்கு தென்கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 763 -ஆக அதிகரித்துள்ளது.
தென்கொரியாவில் வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். சீனாவை அடுத்து கரோனா வைரஸ் பாதிப்புக்கு அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா அறியப்படுகிறது.
இதன் காரணமாக தென்கொரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.