புர்கினோ பாசோவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு சவுதி கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் உள்ள யாஹா மாகாணத்தில் சமீபத்தில்
தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் பலியாகினர். மூன்று பேர் கடத்தப்பட்டனர்.
இந்த நிலையில் தேவலாயத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.புர்கினோ பாசோ மக்கள் வன்முறை மற்றும் தீவிரவாதத்தை நிராகரிக்கிறார்கள்” என்றார்.
சுமார் 2 கோடி அளவுக்கு மக்கள் தொகை கொண்ட புர்கினா பேசோ பிரான்ஸ் நாட்டின் காலனியாதிக்கத்தில் இருந்து 1960-ம் ஆண்டு விடுதலை பெற்றது.
பிரான்ஸுடன் நல்ல நட்பில் இருந்து வரும் நிலையில் சமீபகாலமாக இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
புர்கினா பாசோ, அடிக்கடி ஜிகாதி தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன. இது 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சஹேல் பிராந்தியத்தில் இஸ்லாமிய தீவிரவாத வன்முறை பரவத் தொடங்கியதில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.