உலகம்

ஐக்கிய அமீரகத்தில் 9 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

செய்திப்பிரிவு

ஐக்கிய அமீரகத்தில் 9 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஐக்கிய அமீரகத்தின் அரசு ஊடகங்கள் தரப்பில், “ஐக்கிய அமீரகத்தில் உள்ள 37 வயதான சீனாவைச் சேர்ந்தவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அமீரகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துளது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். 2 பேர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 (கரோனா வைரஸ்) எவ்வாறு பரவுகிறது என்பது குறித்துப் போதிய விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய அமீரகத்தின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவைத் தவிர 25 நாடுகளில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு உள்ளது. இதில் சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

முன்னதாக, சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

சீனா மட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட்-19 ( கரோனா வைரஸ்) பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

தவறவீடாதீர்!

SCROLL FOR NEXT