உலகம்

ஐக்கிய அமீரகத்தில் கேரளத் தம்பதியினருக்கு நேர்ந்த துயரம்: தீ விபத்திலிருந்து மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவர் மரணம்

செய்திப்பிரிவு

ஐக்கிய அமீரகத்தில் தீ விபத்திலிருந்து மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவருக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்டதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர் அனில் நினன் (32). இவர் தனது குடும்பத்துடன் ஐக்கிய அமீரகத்தில் வசித்து வருகிறார். இதில் கடந்த வாரம் அவர்களது இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது மனைவி நீனுவைக் காப்பாற்ற முயன்றபோது அனிலின் உடலிலும் தீ பரவியது.

இதனைத் தொடர்ந்து தீக்காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் அனில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அனிலின் நெருங்கிய உறவினர் ஒருவர் கூறும்போது, “இது கடுமையான தருணம். நினு அபாயக் கட்டத்தைக் கடந்துவிட்டார். ஆனால், அனிலின் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது” என்றார்.

தீ விபத்து ஏற்பட்டதற்காக காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் மரணமடைந்த சம்பவம் அங்கு பெரும் சோதகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவறவீடாதீர்!

SCROLL FOR NEXT