எகிப்தில் கரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாக ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து எகிப்தின் சுகாதாரத் துறை அமைச்சகம், “வடக்கு ஆப்பிரிக்க நாடான எகிப்தில் முதன்முதலாக கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்” என்று தெரிவித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற தகவலை எகிப்து வெளியிடவில்லை.
சீனாவைத் தவிர 25 நாடுகளில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு உள்ளது. இதில் சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 1500க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். சுமார் 60,000க்கும் அதிகமானவர்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.