உலகம்

இராக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்

செய்திப்பிரிவு

இராக்கில் உள்ள கிர்குக் மாகாணத்தில் அமெரிக்கத் துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “இராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கிர்கும் மாகாணத்தில் அமெரிக்கத் துருப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் இராக்கில் அமைந்துள்ள அமெரிக்காவின் விமானத் தளத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் சில நாட்களுக்கு முன்னர் பேரணி சென்றனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகம் மற்றும் அங்குள்ள அமெரிக்க விமானத் தளம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்ந்து இராக்கில் அமெரிக்கத் துருப்புகள் உள்ள இடங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த மாதத் தொடக்கத்தில் இராக்கில், ஈரான் புரட்சிப் படையின் தளபதி சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டார் . இதில் இராக்கில் உள்ள அவரது ஆதரவாளர்கள் அமெரிக்கவின் மீதும் அதன் படைகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறவீடாதீர்!

SCROLL FOR NEXT