உலகம்

கரோனா வைரஸுக்காக 10.3 மில்லியன் யென்னை ஒதுக்கும் ஜப்பான்

செய்திப்பிரிவு

கோவிட் -19 (கரோனா வைரஸ் ) தடுப்பு நடவடிக்கைகளுக்காக 10.6 பில்லியன் யென் நிதி ஒதுக்கப்பட இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே முக்கிய அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.

இதில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஜப்பான் தனது நிதியிலிருந்து 10.3 மில்லியன் யென்னை ஒதுக்குவது குறித்து வெள்ளிக்கிழமை நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று ஷின்சே அபே பேசினார்.

ஜப்பானின் டோக்கியா நகரில் கார் ஓட்டுநர் ஒருவருக்கு கோவிட் -19 (கரோனா வைரஸ்) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஜப்பானில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான, 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற கப்பல், ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின் யோககாமா துறைமுகத்துக்கு கடந்த வாரம் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து கப்பல் ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அதிலுள்ள பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் சுமார் 200 பேருக்கு மேல் கோவிட் - 19 (கரோனா வைரஸ் ) பாதிப்பு இருப்பதை ஜப்பான் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT