கரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் இதுவரை 1,018 பேர் உயிரிழந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் இந்தியருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணம் வூஹானில் கடந்த ஆண்டு டிசம் பரில் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களில் அந்த நாடு முழு வதும் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. வூஹான் மற்றும் சுற்று வட்டார நகரங்களுக்கு சீல் வைக் கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சுமார் 6 கோடி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
கரோனா வைரஸால் பாதிக்கப் பட்ட நோயாளிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. சீனாவில் நேற்று ஒரே நாளில் கரோனா வைரஸால் 108 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. சீன அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், "உயிரிழப்பு எண்ணிக்கை 1,018 ஆக உயர்ந்துள்ளது. 43,114 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் இந்தியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அந்த நாட்டு அரசு தெரி வித்துள்ளது. எனினும் அவரது ஊர், பெயர் விவரங்கள் வெளி யிடப்படவில்லை.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் நேற்று கூறும்போது, "சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அபாயகரமாக உள்ளது. இந்த வைரஸை கட்டுப் படுத்த உலக நாடுகள் ஒன் றிணைந்து செயல்பட வேண்டும். வைரஸுக்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சிகளை தீவிரப் படுத்த வேண்டும்" என்று தெரி வித்துள்ளார்.
சீனாவில் இருந்து கேரளா திரும் பிய 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதில் ஒரு மாணவி முழுமையாக குணமடைந்திருப் பதாக அந்த மாநில அரசு அறி வித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதை தடுப் பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சுதன் தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப் பட்டுள்ள முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
வைரஸ் பாதிப்பை கண்டறியும் மருத்துவக் கருவிகள், முகமூடி கள், பாதுகாப்பு கவச உடைகளை போதுமான அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
தற்போது 21 விமான நிலை யங்கள், 12 துறைமுகங்களில் பயணிகளுக்கு மருத்துவ பரி சோதனை நடத்தப்படுகிறது. விமான நிலையங்களில் இதுவரை 2 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவப் பரிசோதனையை தொடர கூட்டத்தில் முடிவெடுக் கப்பட்டது.