உலகம்

முழு அட்லாண்டிக்கையும் ஐந்தே மணி நேரத்தில் கடந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 

ஐஏஎன்எஸ்

பிரிட்டிஷ் ஏர்வேஸின் பயணிகள் விமானம் ஒன்று முழு அட்லாண்டிக் பெருங்கடலையும் ஐந்தே மணி நேரத்தில் பறந்து சென்று சாதனை படைத்துள்ளது.

ஒரு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கியது, நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நான்கு மணி 56 நிமிடங்கள் முன்னதாக புறப்பட்டது.

சாதாரணமாக ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா விமானத்தில் கடந்துசெல்லவே 6 மணிநேரம். ஆனால் அட்லாண்டிக் கடலை சர்வ சாதாரணமாக ஐந்தே மணி நேரத்தில் கடந்துசென்றது பிரிட்டிஷ் விமானம் ஒன்று. இத்தனைக்கும் அது ஏர் ஜெட் அல்ல. பிரிட்டிஷ் ஏர்வேஸின் சாதாரண ஏர்வேஸின் சாதாரண பயணிகள் விமானம்தான்.

ஏற்கெனவே ஒரு நார்வே ஏர் விமானம் இந்த லண்டன், நியூயார்க் நகரங்களுக்கிடையில் ஐந்து மணி நேரம் 13 நிமிடங்கள் விமான நேரத்துடன் பறந்த முந்தைய சாதனையை நேற்றைய சம்பவம் முறியடித்துள்ளது.

இதுகுறித்து உலகளாவிய விமானங்களைக் கண்காணிக்கும் ஃப்ளைட் ராடார் 24இன் தகவல் தொடர்பு இயக்குனர் இயன் பெட்செனிக் கூறியதாவது:

லண்டன், நியூயார்க் இரு நகரங்களுக்கிடையில் பறக்க சப்ஸோனிக் - அல்லது ஒலியின் வேகத்தை விட குறைவாக - வணிக விமானங்களிலேயே இது ஒரு புதிய வேக சாதனையை உருவாக்கியுள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ் போயிங் 747 விமானம்.

ஃபிளைட்ராடார் 24 இன் படி, நியூயார்க்குக்கும் லண்டனுக்கும் இடையில் சமீபத்திய சராசரி விமான நேரம் 6 மணி 13 நிமிடங்கள் ஆகும். இந்த பயணிகள் விமானம் இரு நகரங்களையும் கடக்க 102 நிமிடங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஒரு விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தை மிகக் குறுகிய நேரத்திலேயே பிரிட்டிஷ் ஏர்வேஸ் துல்லியமாக 4 மணி 56 நிமிட நேரத்தில் அட்லாண்டிக்கை கடந்து வென்றது, விர்ஜின் விமானம் அதே நேரத்தில் லண்டனுக்கு வந்தது, ஆனால் ஒரு நிமிடம் மெதுவாக. காற்று மற்றும் சாதகமான வானிலை வேகமான விமானத்திற்கு ஏற்றவை இந்த சாதனை நிகழ்த்த ஏதுவாக இருந்தது.

இவ்வாறு ஃப்ளைட் ராடார் 24இன் தகவல் தொடர்பு இயக்குனர் தெரிவித்தார்.

'போயிங் 747' விமானம் சென்ற நேரத்தை பிரிட்டிஷ் ஏர்வேஸ்ஸும் உறுதிப்படுத்தியது. வேகத்தை விட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் தெரிவித்தது.

சூப்பர்சோனிக் கான்கார்ட் விமானங்கள் அட்லாண்டிக் கடலில் மூன்று மணி நேரத்திற்குள் பறக்கப் பயன்படுத்தப்பட்டன, ஆனால் 2003 இல் பறப்பதை நிறுத்தியது.

SCROLL FOR NEXT