உலகம்

ட்ரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்த 2 பேர் பதவி பறிப்பு

செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், செனட் சபையில் இந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனுக்கான அமெரிக்க தூதர் கோர்டன் சொந்த்லாந்த் மற்றும் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உக்ரைன் நிபுணர் லெப்டினன்ட் கர்னல் அலெக்சாண்டர் விந்த்மான் ஆகிய இருவரையும் ட்ரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் குழு முன்பு பதவி நீக்க தீர்மானம் மீதான விசாரணை நடந்தது. அப்போது, இந்த இரு அதிகாரிகளும் ட்ரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்ததாகவும் இதனால்தான் இவர்களுடைய பதவி பறிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதுகுறித்து வெள்ளை மாளிகை எந்தக் கருத்தும் தெரி விக்கவில்லை.- பிடிஐ

SCROLL FOR NEXT