உலகம்

பொதுமக்கள் மீதான ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அமைதி முயற்சிகளுக்கு அச்சுறுத்தல்: ஏமன் துணை அதிபர்

செய்திப்பிரிவு

பொதுமக்கள் மீதான ஹவுத்தி தீவிரவாதிகளின் தாக்குதல் அமைதி முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று ஏமன் துணை அதிபர் தெரிவித்துள்ளார்.

ஏமனுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு தூதருடனான சந்திப்புக்குப் பிறகு இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏமன் துணை அதிபர் அலி மொஹ்சென் அல்-அஹ்மர் கூறும்போது, “ பொது மக்கள் மீதான ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அமைதி முயற்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக
உள்ளது.

ஏமனின் மத்திய பகுதிகளில் உள்ள மரிப் நகரில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் பலர் பலியாகினர்” என்று தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT