இன்று உலகை அச்சுறுத்தும் தொற்று வைரஸான கரோனா குறித்து முதல் எச்சரிக்கை விடுத்த மருத்துவர் லி வென்லியாங்கையும் கரோனா விட்டுவைக்கவில்லை, கரோனா வைரஸ் இந்த மருத்துவரின் உயிரையும் குடித்ததாக வூஹான் செண்ட்ரல் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 30ம் தேதியன்றே இவர் கரோனா குறித்து எச்சரித்தார், ஆனால் போலீஸ் இவரை ‘தப்புத்தப்பாக கூறாதீர்கள்’ என்று கூறி அடக்கியது.
இவரது மரணம் குறித்து முரண்பட்ட பல்வேறு தகவல்கள் வெளியானாலும் வெள்ளி அதிகாலை 2:58-க்கு இவர் மரணமடைந்ததாக பீப்பிள்ஸ் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
யூஹானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவரான லி வென்லியாங், கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பாகவே, யூகானில் சார்ஸ் போன்ற புதிய வைரஸ் பரவுவதாக தனது நண்பர்களிடமும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து இருந்தார். ஆனால், லீ வென்லியாங்கிற்கு சம்மன் விடுத்த சீன போலீசார், இது போன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்து இருந்தனர்.
சீனாவில் கரோனாவுக்கு பலி எண்ணிக்கை 636 ஆக அடிகரித்துள்ளது. மேலும் 30,000த்திற்கும் அதிகமானோரை கரோனா தொற்றியிருப்பதாக சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
தவறவிடாதீர்: