உலகம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: ராணுவ வீரர்கள் பலி

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் 10க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “ ஆப்கானிஸ்தானில் குண்டஸ் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கன் ராணுவ வீரர்கள் 10க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

பலர் காயமடைந்தனர். மேலும் தலிபான்களுடன் நடந்த சண்டையில் ஆப்கன் ராணுவ வீரர்கள் மூவர் மாயமாகி உள்ளனர். இதில் தலிபான்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது” என்றார்.

இந்த நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சைபிஹுல்லா முஜாஹித் கூறும்போது, “ஆப்கான் ராணுவ வீரர்கள் மிதான இத்தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம். இதில் 35 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். நான்கு பேர் கடத்தப்பட்டனர்” என்றார்.

அமெரிக்கா ராணுவ விமான தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்று கொண்டதைத் தொடர்ந்து இத்தாக்குதல் தற்போது நடத்தப்பட்டுள்ளது.

தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு வரும் நிலையில் இத்தாக்குதலை தலிபான்கள் நடத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT