இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஜனவரி 8-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் புதிய புரட்சி ஏற்பட்டது. அந்த புரட்சிக்கு ஆதரவாகவே மக்கள் இப்போதும் வாக்களித் துள்ளனர்.
அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நல்லாட்சி அமைப்போம். நல்லொழுக்கம் மிக்க நாட்டை கட்டி எழுப்புவோம். அனைத்து தரப்பு மக்களும் சம அந்தஸ் துடன் வாழ நடவடிக்கை எடுப்போம்.
புதிய யுகத்தில் சவால்களை எதிர்கொண்டு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம். வெற்றி யாளர்கள், தோற்றவர்கள் என்று பிரிந்து செயல்படாமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.