உலகம்

அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் 106 பேர் பலி

செய்திப்பிரிவு

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4,515 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது சீனாவில் கரோனா வைரஸ் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 4,515 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கபட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய வுஹான் நகரம் உள்ளிட்ட 17 நகரங்களில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்த 17 நகரங்களில்தான் பெரும்பாலும் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மற்ற நகரங்களிலும் இந்த பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தியுள்ளார்கள்.

அமெரிக்கா எச்சரிக்கை

முக்கியமான வேலை இருந்தால் மட்டும் சீனாவுக்கு பயணம் செய்யுமாறு இல்லையேல் சீனாவுக்கு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவை தவிர்த்து கரோனா வைரஸ் பாதிகப்பட்ட பிற நாட்டவர்களின் எண்ணிக்கை:

பிரான்ஸ் (2) ஆஸ்திரேலியா(1), தாய்லாந்து(8), ஜப்பான்(3), தென் கொரியா(4), அமெரி்க்கா (5), வியட்நாம்(2), சிங்கப்பூர்(3), நேபாளம்(1), ஹாங்காங்(8), மாக்காவ் (5), தைவான்(8) , பிரான்ஸ் (3), ஆஸ்திரேலியா (4 இலங்கை (1) ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT