உலகம்

ஆப்கானிஸ்தானில் விபத்தில் சிக்கிய விமானம்: பயணிகள் விமானமா?

செய்திப்பிரிவு

கிழக்கு ஆப்கானிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் பயணிகள் விமானமா? ராணுவ விமானமா? என்று இதுவரை தெரியவில்லை.

இதுகுறித்து சர்வ தேச ஊடகங்கள் தரப்பில், “ ஆப்கானிஸ்தானில் விமானம் ஒன்று காஸ்னி மாகாணத்தில் உள்ள தெஹ் யக் மாவட்டத்தில் தொழில் நுட்ப குறைபாடு காரணமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து விமான தீப்பற்றி கொண்டது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

மலைகள் அதிகம் கொண்ட காஸ்னி மாகாணத்தில் குளிர் காரணமாக பனி படர்ந்துள்ளது. இதன் காரணமாக விமனத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என ஆப்கான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமான விபத்தில் பலியானவர்கள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் விமான விபத்துக்குள்ளான பகுதி தலிபான்களின் கட்டுப்பாடின் கீழ் உள்ளதாக கூறப்படுகிறது.

விமான விபத்து குறித்து தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் முஜாகித் கூறும்போது, “ விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து கூடுதல் தகவல் தற்போது தெரிவிக்க முடியாது” என்றார்.

SCROLL FOR NEXT