உலகம்

யூதர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட ‘ஹோலகாஸ்ட்’ நினைவு தினம் திங்களன்று அனுசரிப்பு

செய்திப்பிரிவு

ஜெர்மனியை ஆண்ட ஹிட்லரால் இரண்டாம் உலக போரில் யூதர்கள் திட்டமிட்டு இனபடுகொலை செய்யப்பட்ட நிகழ்வை குறிப்பதை ஹோலோகாஸ்ட் என்கிறோம்.

ஹிட்லர் நடத்திய இனப்படுகொலையில் யூதர்கள் மட்டுமில்லாது ஜிப்சிகள், தன்பாலின ஈர்பாளர்கள், ரஷ்யர்கள், கம்யூனிஸ்ட்கள், போர் கைதிகள் என பலரும் கொல்லப்பட்டனர். சுமார் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த இன அழிப்பில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வரலாற்றில் கரும் புள்ளியாக உள்ள ஹோலகாஸ்ட் நினைவு தினத்தின் 75வது ஆண்டு நினைவு தினம் உலக நாடுகள் பலவற்றில் அனுசரிக்கப்படுகிறது.

இத்தினத்தில் இப்படுகொலையில் பலியானவர்களுக்கு இஸ்ரேல் மற்றும் யூதர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் உள்ள மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், உலக நாடுகளின் தலைவர்கள் சிலரும் ஹோலகாஸ்ட் நினைவு தினத்தை தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரிட்டீஷ் எதிர் கட்சி தலைவரும், தொழிலாளர் கட்சி தலைவருமான ஜெரமி கார்பின் கூறும்போது, “ ஹோலகாஸ்ட் நினைவு தினம் இன்று . கடந்த காலத்தின் கொடூரங்கள், நாசிசத்தின் தீமைகள், இனப்படுகொலை இவ்வாறு எல்லா வகையான இனவெறியையும் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

அவை எங்கு தோன்றினாலும் அதனை வேரூன்றாமல் தூக்கி ஏறிய நாம் எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT