இலங்கையில் அதிபர் சிறிசேனா கட்சியும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளன.
ரணில் தலைமையிலான கூட் டணி அரசுக்கு 2 ஆண்டுகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று சிறிசேனா கட்சி அறிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர் தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச பின் னடைவைச் சந்தித்தார். நாடாளுமன் றத்தில் மொத்தமுள்ள 225 இடங் களில் பெரும்பான்மையை நிரூ பிக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ரணில் கட்சி 106 இடங் களைப் பிடித்துள்ளது. பெரும் பான்மை பலத்தை எட்ட மேலும் 7 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
சிறிசேனா அவசர ஆலோசனை
இந்தப் பின்னணியில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமை யில் லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கொழும்பில் நேற்று நடைபெற்றது.
இதில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசை அமைக்கவும் புதிய அர சுக்கு 2 ஆண்டுகள் ஆதரவு அளிக் கவும் முடிவு செய்யப்பட்டது. கூட் டணி அரசு அமைப்பது தொடர்பாக முன்னாள் அதிபர் சந்திரிகா பண் டாரநாயக்க தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட் டுள்ளது. இந்தக் குழுவுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள், அதிபர் சிறிசேனாவைச் சந்தித்துப் பேசி னர். அப்போது கூட்டணி அரசை அமைக்க இறுதி உடன்பாடு எட்டப் பட்டது. அதன்படி ரணில் விக்ரம சிங்கே பிரதமராகவும் ஐக்கிய மக் கள் சுதந்திர கூட்டணியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் துணைப் பிரதமராகவும் பதவியேற்கக்கூடும் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜனவரி 8-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்ரிபால சிறிசேனா முன்நிறுத் தப்பட்டார். அந்தத் தேர்தலில் அவர் அமோக வெற்றிபெற்று அதிபரானதும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரம சிங்கேவை பிரதமராக நியமித்தார்.
இதைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவி யில் இருந்து ராஜபக்ச விலகினார். அதிபர் சிறிசேனா கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார்.
எதிரும்புதிருமாக அரசியல் நடத்திய லங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஒன்றிணைந்து செயல்பட்டன.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணி கட்சிகளின் நிர்ப்பந்தத்தால் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக களம் இறங்கினார். அதிபர் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் தோல்வியை தழுவியிருப்பதால் அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிறகு அதிபர் சிறிசேனாவும், ரணில் விக்ரமசிங்கேவும் மீண்டும் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளனர்.
அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற அடிப்படை யில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்கப் படும் என்று தெரிகிறது.
ரணில் இன்று பதவியேற்பு
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று காலை பதவியேற்க உள்ளார். அதிபர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேனா, ரணிலுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
கடந்த 1993-ல் முதல்முறையாக ரணில் பிரதமர் பொறுப்பை ஏற்றார். இன்று நான்காவது முறையாக அவர் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். அவர் நேற்றே பிரதமராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் கூட்டணி அரசு அமைப்பது குறித்த பேச்சு வார்த்தையால் ஒருநாள் கால தாமதமாகியுள்ளது.