உலகம்

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு: மருத்துவ அவசர நிலையை அறிவிக்க முடிவு?

செய்திப்பிரிவு

சீனாவில் கரோனா வைரஸ் தாக்கு தல் பெரும் அச்சுறுத்தலை ஏற் படுத்தியுள்ளதை அடுத்து, மருத்துவ அவசர நிலையை அறிவிப் பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிசீலித்து வருகிறது.

சீனாவின் ஹுபெய் மாகாணத் தில் உள்ள வூஹான் நகரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு காரண மாக இதுவரை 17 பேர் உயிரிழந் துள்ளனர். 571 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனா முழுவதும் பல்வேறு பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. அதன்படி, முதற்கட்ட நடவடிக்கையாக, வூஹான் மற்றும் வுஹாங்காங் நகரங்களில் ரயில், பேருந்து மற்றும் விமானப் போக்குவரத்து நேற்று காலை முதலாக முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், மிக அத்தியாவசியத் தேவை ஏற்பட்டால் ஒழிய, வூஹான் நகரை விட்டு யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும், அதே போல் மற்றவர்களும் வூஹான் நகரத்துக்குள் வர வேண்டாம் எனவும் ஹுபெய் மாகாண அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், ஹுபெய் மாகாண மக்கள் அனை வரும் கரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள சுவாச முக மூடிகளை அணிந்து கொள்ளு மாறும் அறிவுறுத்தப்பட்டிருக் கின்றனர். இதுதவிர, அந்த மாகாணத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வருபவர் களுக்கு சிறப்பு வார்டுகள் அமைக் கப்பட்டிருப்பதாகவும் சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் உள்ள ஷாங்காய் நகரில் 7 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதேபோல், அமெரிக்கா, தாய் லாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவசர ஆலோசனை

இந்நிலையில், சீனா மட்டு மின்றி பிற நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவி வருவதை கருத் தில்கொண்டு, உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவி்ல அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின்போது, சர்வ தேச அளவில் மருத்துவ அவசர நிலையை அறிவிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த காலங்களில் பன்றிக் காய்ச்சல், எபோலா உயிர்க்கொல்லி நோய்கள் பரவிய போதும் இதுபோன்ற மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT