பாகிஸ்தானில் ஊடகங்கள் தொடர்ந்து தன்னை விமர்சிப்பதால் காலை செய்தித் தாள் படிப்பதில்லை என்றும் மாலை விவாத நிகழ்ச்சி பார்ப்பதில்லை என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
இதில் பாகிஸ்தானில் ஊடகத்தால் தான் விமர்சிக்கப்படுவது குறித்தும், அதை எப்படி கையாள் கிறார் என்பதுகுறித்து இம்ரான் கான் பேசி இருந்தார்.
அதில் இம்ரான் கான் கூறியதாவது, ”நீங்கள் சொர்கத்தை விரும்புகிறீர்கள். ஆனால் மரணிக்க விரும்பவில்லை என்பதை போன்றதாகும் இது. இது ஒரு மோசமான முன் உதாரணம். நான் 40 ஆண்டுகளாகவே விமர்சனங்களை சந்தித்து வருகிறேன். ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக நான் ஊடகங்களால் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டேன்.
இதிலிருந்து மீள காலையில் செய்தித் தாள்களை படிக்காமல் இருப்பது, மாலையில் விவாத நிகழ்ச்சிகளை பார்க்க கூடாது என்று முடிவு செய்தேன். இதில் பிரச்சனை என்னவென்றால் என் அதிகாரிகள் அதனை பார்த்துவிட்டு என்னிடம் கூறுவார்கள். இதற்கெல்லாம் நான் கூறுவது பொறுமையாக இருங்கள் என்பதே... குறைந்த நாள்தான் இந்த வலி இருக்கும். ஆனால் பாகிஸ்தானில் நல்ல எதிர்காலத்தை நோக்கி நாங்கள் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறேன்” என்றார்.