சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் என்ற புதிய தகவலை அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட போது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக் கப்படுபவர்களுக்கு முதலில் சாதாரண மான ஜலதோஷம் ஏற்படும். பின்னர், காய்ச்சல் உருவாகி ‘நிமோனியா' என்ற நுரையீரல் தொற்றினை இந்த வைரஸ் உருவாக்கும். முறையான சிகிச்சை பெறாவிட்டால், பாதிப்புக்கு உள்ளானவர்கள் உயிரிழக்க நேரிடும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
சீனாவில் நேற்றுடன் சேர்த்து, இந்த வைரஸ் தாக்குதலுக்கு 6 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது. மேலும், 350 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட் டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் நோய் வேகமாக பரவுவதைத் தடுக்க, சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு ஆய்வு களை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆய்வின் ஒரு கட்டமாக, கரோனா வைரஸ் கிருமி, ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளி தில் பரவும் என்பது கண்டறியப்பட்டு இருப்பதாக சீன சுகாதார ஆணையர் ஜோங் நன்ஷான் நேற்று தெரிவித்தார்.
பரிசோதனைக்கு உத்தரவு
இதனிடையே, கரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவதை தடுக்க சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 7 விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளை ‘ஸ்கிரீனிங்' பரிசோதனைக்கு உட்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.