உலகம்

 சீனாவின் கொடிய வைரஸ் அறிகுறிகள் தற்போது தென்கொரியாவில்!

செய்திப்பிரிவு

சீனாவின் கொடிய வைரஸான கொரானா வைரஸ் நோயின் தாக்கம் தற்போது தென்கொரியாவில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

உலகையே அஞ்ச வைத்துள்ள கொடிய சார்ஸ் வைரஸ், கொரானா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. கொரானா வைரஸ் சீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு மற்றும் நேரடி விலங்குச் சந்தையிலிருந்து தற்போது பரவியுள்ளது.

வுஹான் மற்றும் ஷென்சென் ஆகிய சீன நகரங்களில் பரவும் இந்த கொரானா வைரஸ் தாக்குதலுக்கு நிமோனியா நோய்க்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வைரஸ் காரணமாக இரண்டு பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ள நிலையில், இவ்வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் தென்கொரியாவில் இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இவ்வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

மேலும் தாய்லாந்து, ஜப்பான் நாடுகளிலில் வைரஸ் அறிகுறிகளுடன் சிலர் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT