சீனாவில் கொடிய வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அஞ்ச வைத்துள்ள கொடிய சார்ஸ் வைரஸ் கொரானா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. கொரானா வைரஸ்
சீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு மற்றும் நேரடி விலங்கு சந்தையிலிருந்து தற்போது பரவியுள்ளது.
வுஹான் மற்றும் ஷென்சென் ஆகிய சீன நகரங்களில் பரவும் இந்த கொரானா வைரஸ் தாக்குதலுக்கு நிமோனியா நோய்க்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வைரஸ் காரணமாக இரண்டு பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 3 -ஆக அதிகரித்துள்ளதாக சீனா அரசு தெரிவித்துள்ளது. மேலும் 140 பேரிடம் இந்த வைரஸ் தாக்கத்துக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது என்றும். இதில் 33 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் இந்த அபாயகரமான வைரஸ் தாக்குதலுக்கு இந்தியர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நோய் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் இவர் என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர். கொரானா வைரஸ் கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் சீனா மற்றும் ஹாங்காங்கில் கடுமையான சுவாசக் கோளாறை ஏற்படுத்தி கிட்டத்தட்ட 650 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.