இந்தியாவில் உள்ள 95.30 கோடி மக்கள் அதாவது 70 சதவீத மக்களிடம் இருக்கும் சொத்து மதிப்புக்கு இணையாக உள்ள நாட்டில் உள்ள ஒரு சதவீத பெருங்கோடீஸ்வரர்களிடம் சொத்து உள்ளது என்று உலக பொருளாதார கூட்டமைப்பு(டபிள்யு இ எப்) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஒரு சதவீத கோடீஸ்வரர்களிடம் இருக்கும் சொத்துக்களை வைத்து ஒரு ஆண்டுக்கும் அதிகமான மத்திய பட்ஜெட்டை தயாரிக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதாரக் கூட்டமைப்பின் 50-வது ஆண்டுக் கூட்டம் இன்று தொடங்குகிறது. அதற்கு முன்பாக, பொதுநல அமைப்பான ஆக்ஸ்பாம் வெளியிட்ட அறிக்கையில், இந்த பூமியில் உள்ள 60 சதவீத மக்கள் அதாவது 450 கோடி மக்களிடம் இருக்கும் சொத்துக்கு இணையாக உலக அளவில் உள்ள 2 ஆயிரத்து 153 கோடீஸ்வரர்களின் சொத்து இருக்கிறது.
உலக அளவில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வசிக்கும் அனைத்து பெண்களிடம் இருக்கும் சொத்து மதிப்பு, உலகளவில் 22 பெரும் பணக்காரர்களிடம் இருக்கிறது.
உலகில் மக்களிடையே சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதும் இடைவெளி விரிவடைந்து வருவதும், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பெருகிவருவதும் அதிர்ச்சியாக இருக்கிறது. உலகப் பொருளாதார கூட்டமைப்பின் 5 நாட்கள் கூட்டத்தில் மக்களின் வருமானம், சமத்துவமின்மை ஆகியவை முக்கிய பேசு பொருளாக இருக்கும், அதிகமாக விவாதிக்கப்படும்.
ஏழை, பணக்காரர்கள் இடைவெளி அதிகரிப்பு ஒவ்வொரு நாட்டிலும், கண்டத்திலும் பெரும் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வளர்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் வருமான ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக இருக்கிறது
இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள 63 கோடீஸ்வர்களிடம் இருக்கும் சொத்து ஒரு ஆண்டுக்கும் அதிகமாக இந்திய அரசு பட்ஜெட்டுக்கு செலவிடும் தொகையை வைத்துள்ளனர். அதாவது கடந்த 2018-19ம் ஆண்டுபட்ஜெட்டுக்கு 24 லட்சத்துக்கு 42 ஆயிரத்து 200 கோடி இந்திய அரசு செலவிட்டது அதற்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள 95.30 கோடி மக்கள் அதாவது 70 சதவீத மக்களிடம் இருக்கும் சொத்து மதிப்புக்கு இணையாக உள்ள நாட்டில் உள்ள ஒரு சதவீத பெருங்கோடீஸ்வரர்களிடம் சொத்து உள்ளது
வீடுகளில் இருக்கும் பெண்களைப் பொறுத்தவரை ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு ஆண்டு பெறும் ஊதியத்தைப் பெற அவர்கள் 22 ஆயிரத்து 277 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.
தொழில்நுட்ப நிறுவன சிஇஓ அதிகாரி ஒரு வினாடிக்கு ரூ.106 ஊதியமாகப் பெறுகிறார். அவர் 10 நிமிடம் பெறும் ஊதியத்தை பெறவே வீட்டு வேலை செய்யும் பெண்கள் பெற ஒரு ஆண்டு ஆகும்.
பெண்களும், சிறுமிகளும் 326 கோடி மணிநேரம் ஊதியம் பெறாமல் வேலை செய்கிறார்கள். அவர்களின் பங்களிப்பு இந்தியப் பொருளாதாரத்துக்கு ஆண்டுக்கு ரூ.19லட்சம் கோடியாக இருக்கிறது. இது இந்திய பட்ஜெட்டில் கல்விக்காகச் செலவிடும் (ரூ.93ஆயிரம் கோடி) தொகையைக் காட்டிலும் 20 மடங்கு அதிகமாகும்.
சமையல் செய்வது, வீட்டைச் சுத்தம் செய்வது, குழந்தைகளைக் கவனிப்பது, வீட்டில் முதியோரைக் கவனிப்பது போன்றவற்றுக்குப் பெண்களுக்கு எந்தவிதமான ஊதியமும் வழங்கப்படுவதில்லை. தங்களுக்குள் ஒரு மறைமுகமாக ஒரு இயந்திரத்தை வைத்துக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை நகர்த்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் உலகளவில் பெண்களும், சிறுமிகளும் 125 கோடி மணிநேரம், ஊதியம் இல்லாமல் பணியாற்றி, உலகப் பொருளாதாரத்துக்கு 10.80 லட்சம் கோடி டாலர் பங்களிப்பு செய்கின்றனர்.
உலகளவில் பணக்காரர்கள் தங்கள் செலுத்தும் வரியில் கூடுதலாக 0.5 சதவீதம் செலுத்தினால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு 11.7 கோடி பேருக்குக் குழந்தைகள் நலன், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது