உலகம்

இலங்கையில் தனியார் ஹெலிகாப்டர்கள் மீதான 25 ஆண்டுகள் தடை நீக்கம்

செய்திப்பிரிவு

சுற்றுலா துறையை உயர்த்தும் நடவடிக்கையாக கொழும்புவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் ஹெலிகாப்டர்களுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது.

கொழும்புவிலிருந்து தனியார் ஹெலிகாப்டர்களை இயக்க இருந்த 25 ஆண்டுகள் தடையை சுற்றுலா நலனுக்காக நீக்கி உள்ளார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே.

இதுகுறித்து சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “ தனியார் ஹெலிகாப்டர்கள் இனி சுற்றுலா பயணிகளுக்காக கொழும்புவில் இயங்கலாம். முதற்கட்டமாக உள்ளூரைச் சேந்த ஆப்ரேட்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையை பொறுத்தவரை அங்கு வருடத்திற்கும் 20 லட்சத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றன. இதன் காரணமாக சுற்றுலா துறையில் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை அதன் மூலம் உயர்த்து நடவடிக்கையில் இலங்கை இறங்கி உள்ளது.

இந்தியா, சீனா, பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT