கடந்த 3-ம் தேதி அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த படைத் தளபதி சுலைமானி உயிரிழந்தார். இராக் தலைநகர் பாக்தாத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் இராக்கில் முகாமிட்டுள்ள சுமார் 5,000 அமெரிக்க ராணுவ வீரர்களை வெளியேற்ற வேண்டும் என்ற குரல் அந்த நாட்டில் ஓங்கி ஒலிக்கிறது. இதனால் அமெரிக்கா, இராக் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட அமெரிக்கா, இராக் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் வழக்கமான கூட்டு போர் பயிற்சியை தொடங்கினர். ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் பயிற்சி நடைபெறுகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.