உலகம்

இராக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது மீண்டும் தாக்குதல்

செய்திப்பிரிவு

இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது பீராங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இராக் அதிகாரிகள் தரப்பில், ‘‘இராக்கில் உள்ள பாலத் நகரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது 7 பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை” என்றார்.

இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்று தெரியவில்லை. எனினும் ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று உறுதிப்படுத்தபப்படாத செய்திகள் வெளியாகின.

முன்னதாக, ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான், அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.

இந்தச் சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.

SCROLL FOR NEXT