உலகம்

ஈரான் மீது ட்ரம்ப் போர் தொடுப்பதைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்

செய்திப்பிரிவு

ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரான் மீது ட்ரம்ப் போர் தொடுப்பதைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஈரான் மீது ட்ரம்ப் போர் தொடுப்பதைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக் கட்சியினரால் கொண்டுவரப்பட்டது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 224 பேர் வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.

பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இத்தீர்மானம் செனட் சபையில் நிறைவேற்றப்படவுள்ளது.

ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான் அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.

இந்தச் சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.

SCROLL FOR NEXT