இந்தோனேசியாவில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ”இந்தோனேசியாவில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜகார்த்தா உட்பட அதன் அருகிலுள்ள நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.
பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மின்சாரம் பல மாவட்டங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தோனேசியாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளமாக இது கருதப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக ஜகார்த்தாவில் உள்நாட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் 20,000 அதிகமான பயணிகள் தவித்து வருவதாக இந்தோனேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் இந்தோனேசிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.