உலகம்

தென்னாப்பிரிக்க அதிபராக ஜுமா பதவியேற்பு

செய்திப்பிரிவு

தென்னாப்பிரிக்க அதிபராக ஜேக்கப் ஜுமா தொடர்ந்து இரண்டா வது முறையாக பதவியேற்றார்.

பிரிட்டோரியாவில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். கடந்த 5 ஆண்டுகளில் தனது ஆட்சியில் தென்னாப் பிரிக்கா வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதா அவர் பெருமையுடன் தெரிவித் தார்.

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் மொகாபே, நைஜீரிய அதிபர் ஜோனத்தான் உள்பட 4500 சிறப்பு விருந்தினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

எனினும் ஐரோப்பா, தென் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.

நெல்சன் மண்டேலா மறைந்த பிறகு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் தேர்தல் இது. கடந்த 7-ம் தேதி அங்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஜுமாவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பொருளாதார நெருக்கடி, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜுமா மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT