உலகம்

இந்தோனேசியாவில் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து விபத்து: 24 பேர் பலி

செய்திப்பிரிவு

இந்தோனேசியாவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், “ இந்தோனேசியாவில் சுமத்ரா மாகாணத்தில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 24 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் பேருந்துக்குள் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இந்தோனேசிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்தோனேசியாவைப் பொறுத்தவரை அங்கு சாலைகள் தரம் குறைந்து இருக்கும் காரணத்தால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் சமீப ஆண்டுகளாக விபத்துகள் ஏற்படுவது அதிகமாகி வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தோனேசியாவின் சுகபுமி மாகாணத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர்.

SCROLL FOR NEXT