காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பாக சீனாவின் கோரிக்கையை அடுத்து 17-12-19 செவ்வாயன்று ஐநா பாதுகாப்புக் கவுன்சில் குழு மூடிய அறை விவாதம் செய்யவிருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்டில் பாகிஸ்தான் கோரிக்கை வைத்ததையடுத்து இதே போன்று மூடிய அறை விவாதம் ஒன்றை ஐநா மேற்கொண்டதற்குப் பிறகு தற்போது மீண்டும் கூடும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் வட்டாரத்தைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத சில தூதர்கள், செவ்வாயன்று, அதாவது இன்று மூடிய அறையில் கூட்டம் நடைபெறுவதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு உறுதி செய்தனர்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் 1948 மற்றும் 1950களில் ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு இடையேயான விவகாரத்தில் நிறைய தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.
இந்நிலையில் செவ்வாயான இன்று மூடிய அறைக் கூட்டத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டவிருப்பதாகத் தெரிகிறது.