தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸில் உள்ள தாவோ நகரிலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 என பதிவாகியிருந்தது.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். பூகம்பத்தின்போது ஏராளமான கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. உயரமான கட்டிடங்கள், மருத்துவமனைகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் ஒரு குழந்தை பலியானதாக தெரியவந்துள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தற்போது அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.- பிடிஐ