உலகம்

பிரிட்டன் தேர்தல்: இந்திய வம்சாவளியினர் பெரும் வெற்றி

செய்திப்பிரிவு

பிரிட்டன் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் பெருமளவு வெற்றி பெற்றுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால், அவரது பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவை கடந்த 19-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் எம்.பி.க்கள் தோற்கடித்தனர்.

இதனால் அவர் பதவி விலகி, நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது. இங்கிலாந்தில் 650 இடங்களைக் கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவைப்படும் நிலையில் கன்சர்வேடிவ் கட்சி 358 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதில் தொழிலாளர் கட்சிக்கு 203 இடங்கள் கிடைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து கருத்துக் கணிப்புகளில் கூறியதுபோலவே கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்தநிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் தலா 7 பேர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகியுள்ளனர்.

கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில், பிரீத்தி படேல், அலோக் சர்மா, ஷைலாஷ் வரா, சுலா பிரவர்மன், மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் எம்.பி.க்களாக வெற்றி பெற்றள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த முறையும் எம்.பி.க்களாக இருந்தவர்கள். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் இந்த முறை ககன் மொகிந்திரா, கிளாரி கவுடின்கோ ஆகிய இருவர் புதிதாக வெற்றி பெற்றுள்ளனர்.

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் விரேந்திர சர்மா, தன்மன்ஜித் சிங், சீமா மல்கோத்ரா, ப்ரீத் கவுர் கில், லிசா நந்தி, வல்ரீவஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் /அனைவரும் கடந்த முறையும் எம்.பி.,க்களாக இருந்தவர்கள்) ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களை தவிர கூடுதாக நவிந்து மிஸ்ரா இந்தமுறை புதிதாக வெற்றி பெற்றுள்ளார்.

இவர்களை தவிர லிபரல் கட்சி சார்பில் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய வம்சாவளியினர் மொத்தம் 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT