உலகம்

உக்ரைன்: கல்லூரி தீ விபத்தில் 16 பேர் பலி

செய்திப்பிரிவு

உக்ரைனில் கல்லூரி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “உக்ரைனில் உள்ள ஒடிசா நகரத்தில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர்.

பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிக் கட்டிடத்திலிந்து பலர் கீழே விழுந்ததால் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT