உலகம்

மாயமான சிலி ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது

செய்திப்பிரிவு

மாயமான சிலியின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் விமான படை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ராணுவ விமானத்தில் பயணம் செய்த 38 பேரின் நிலைமை குறித்து தீவிர தேடுதலில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, சி - 130 ஹெர்குலஸ் ராணுவ விமானம் சிலியின் புண்டா அரேனாஸ்லிருந்து பிற்பகல் 4.45 மணியளவில் புறப்பட்டு அண்டார்டிகாவுக்கு செல்லும் வழிதடத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனைத் தொடர்ந்து விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான ராணுவ விமானத்தில் 38 பேர் இருந்தன.

இந்த நிலையில் மாயமான விமானம் விபத்தில் சிக்கியதாக சிலி விமானம் படை தற்போது தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், அண்டார்டிகா ராணுவ தளத்துக்கு செல்லவிருந்த சி - 130 ஹெர்குலஸ் விமானம் தகவல் துண்டிக்கப்பட்டு விபத்தில் சிக்கியது. இந்த நிலையில் விமானத்தில் பயணித்த எவரும் உயிருடன் இருக்கின்றார்களா என தொடர்ந்து தேடுதலில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT