உலகம்

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு

செய்திப்பிரிவு

நியூசிலாந்தின் ஒயிட் தீவில் உள்ள எரிமலை வெடிக்க தொடங்கி உள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்தின் தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில் கூறப்பட்டதாவது:

“வடக்கு ஐஸ்லாந்திருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒயிட் ஐஸ்லாந்து தீவில் உள்ள எரிமலை ஒன்று இன்று (திங்கட்கிழமை) வெடிக்கத் தொடங்கியுள்ளது. எரிமலையிலிருந்து சீற்றத்துடன் கரும்புகைகள் வெளிவர தொடங்கி உள்ளன. இதனைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற வலியுறுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தினால் சிலர் காயமடைந்துள்ள சுற்றுலா பயணிகள் மாயமாகி உள்ளதாகவும் நியூசிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகாடானே மேயர் டர்னர் தெரிவித்துள்ளார்.


எரிமலை வெடிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துணையிருக்கு என்று கூறியுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ளார்.

SCROLL FOR NEXT