உலகம்

காம்பியாவிலிருந்து சென்ற புலம் பெயர்ந்தவர்களின் படகு அட்லாண்டிக் கடலில் விபத்து: 58 பேர் பலி

செய்திப்பிரிவு

ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் சென்ற படகு அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளானதில் 58 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை கூறும்போது, ''ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு படகு மூலம் புலம்பெயர இருந்தவர்களின் படகு மௌரிடானியாவில் அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளானதில் 58 பேர் பலியாகினர். பலியானவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம். மொத்தம் இப்படகில் 150 பேர் பயணித்துள்ளனர். சுமார் 83 பேர் இந்த விபத்திலிருந்து தப்பிப் பிழைத்து கரை சேர்ந்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளது.

இந்த விபத்திலிருந்து தப்பித்தவர்கள், கடந்த நவம்பர் 27 ஆம் தேதி காம்பியாவிலிருந்து புறப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து காம்பியா அரசிடமிருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை.

2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை காம்பியாவிலுருந்து சுமார் 35,000க்கும் அதிகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் மக்கள் தங்களது பொருளாதார நிலையை உயர்த்துவதற்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் ஐரோப்பிய கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடல் வழியாக[ப் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

SCROLL FOR NEXT