உலகம்

நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து உலகத் தலைவர்கள் கிண்டல்

செய்திப்பிரிவு

நேட்டோ நாடுகளின் கூட்டணி அமைந்து 70 ஆண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடும் நிகழ்ச்சி லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி 2 நாள் உச்சி மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நெதர்லாந்து தலைவர் மார்க் ரூட் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருவதற்கு முன்னதாக மேக்ரான், போரிஸ் ஜான்சன், ட்ரூடோ ஆகியோர் ஒன்றாகக் கூடி ட்ரம்ப் குறித்து கிண்டல் செய்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசியது அங்குள்ள கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

அந்தப் பேச்சின்போது ட்ரம்ப்பின் பெயரை அவர்கள் குறிப்பிடாத போதிலும், அவரைப் பற்றித்தான் கிண்டலும், கிசுகிசுவும் நிறைந்த தொனியில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தது தெளிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT